சுபஸ்ரீ விபத்து குறித்து விஜய் பேச்சு..! கமல் என்ன சொல்றாருனு கேளுங்களேன்..!

755

கடந்த சில தினங்களுக்கு முன்பு, அதிமுக பேனர் சரிந்து விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பேனர் அச்சடிக்கப்பட்ட அச்சகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

இந்த விபத்தையடுத்து, தமிழக அரசியல்வாதிகள், பேனர் வைக்காதீர்கள் என்று அதிரடி அறிக்கையை வெளியிட்டனர். இந்நிலையில் நேற்று பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்ட விஜய், பேனர் விழுந்து இளம்பெண் பலியான விவகாரத்தில் யார் மீது பழி போட வேண்டுமோ, அதை செய்யாமல், லாரி ஓட்டுநர் மற்றும் பேனர் அச்சடித்தவர்கள் மீது பழிப் போடுவதாக குற்றம்சாட்டினார்.

இந்த கருத்துக்குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், நல்ல ஒரு மேடையை நியாயமான குரல் கொடுப்பதற்காக பயன்படுத்தி உள்ளார் என்று விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Advertisement