அப்பாஸ்-க்கு போட்டியா வந்துட்டாரு கமல்..! – கலாய்க்கும் நெட்டிசன்கள்

731

அரசியல்ல போட்டியா வருவார்னு பார்த்தா அப்பாஸ்க்கு போட்டியா வந்துட்டாரு என சமூக வலைதளங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை விமர்சித்து வருகின்றனர். 

அப்படி என்ன செய்தார் என கேக்குறீங்களா..? நல்ல விஷயம் தான்… 

ஒரு தனியார் நிறுவனத்தின் கழிவறை கழுவும் லிக்வீடுக்கு விளம்பரத்தில் நடித்து கொடுத்திருக்கிறார் கமல்.

அதில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் கழிவறையை சுத்தம் செய்வது குறித்து மக்களிடையே புரட்சிகரமாக பேசுகிறார்.

“வெட்கப்படாதீங்க… டாய்லெட் பிரெஷ்-அ கையில எடுங்க” என வருகிறது அவரின் வசனம்…

இந்த விளம்பரத்தில் நடித்ததால், “காசுக்கு காசும் ஆச்சு சமூக அக்கரையோட கொண்ட விழிப்புணர்வும் ஆச்சு-னு’’ சமூக வலைதளங்களில் ரசிகர்களும் ,மக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.