உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் – கமல்ஹாசன்

398

சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் இந்தியன் – 2 படத்தின் சண்டை காட்சி நேற்று படமாக்கப்பட்டது. அப்போது, எதிர்பாராதவிதமாக கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த 3 பேரின் உடலுக்கு நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

சினிமாவில் போதுமான பாதுகாப்பு இல்லை என்பதற்கு இந்த சம்பவம் சான்று என்றும், படப்பிடிப்பின் போது கடைநிலை ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாதது அவமானம் எனவும் வேதனை தெரிவித்தார்.

விபத்தின் போது மயிரிழையில் உயிர் தப்பினேன் என குறிப்பிட்ட கமல்ஹாசன், தானும் அந்த அறையில்தான் இருந்திருக்ககூடும் என கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of