டார்ச் அடித்து பொன்.ராதாகிருஷ்ணனை கலாய்த்த கமல்

448

நோட்டாவிற்கு கீழிருக்கும் பாஜக வை கண்டுபிடிக்கத் தான் இந்த டார்ச் லைட் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கிண்டலடித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தமிழகத்தில் 7 பேர் விடுதலை கருணை அடிப்படையில் விடுவிக்கலாம் ஆனால் தமிழகத்தில் 7 1/2 கோடி பேரையும் விடுதலை செய்யவேண்டும்.

முன்பே கூறியது போல மதுவிலக்கை அமல்படுத்திவிட்டால் கோட்டையில் இருப்பவர்கள் அனைவரும் மது வியாபாரத்திற்கு சென்று விடுவார்கள் என கூறிய அவர், ரஜினி ஆதரவு குறித்த கேள்விக்கு ஆதரவு கேட்பதை விட அவர் கொடுப்பது சிறந்தது அவர் ஆதரவளிப்பார் என நம்புகிறேன் என்றார்.

பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கமலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது குறித்து விமர்சித்தார். டார்ச்லைட்டை வைத்து கமல் ஹாசன் மய்யத்தை கண்டுபிடித்துவிடுவார் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதிலளித்த கமல் நோட்டாவிற்கு கீழிருக்கும் பாஜக வை கண்டுபிடிக்கத்தான் இந்த டார்ச்லைட் என பாஜக வை கிண்டலடித்து பேசினார்.

முன்னதாக தனது கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் டார்ச் லைட் சின்னத்தை பிரதிபலிக்கும் வகையில் கேமராக்களின்முன்பு டார்ச் லைட் அடித்து சைகை காட்டினார்