நோ சொன்ன கமல்? அதிருப்தியில் இருக்கும் இயக்குநர்?

230

இயக்குநர் ஷங்கருக்கு சமீப காலமாக நேரம் சரியில்லை என்றே சொல்லலாம். ஏனென்றால், அவர் தயாரித்த இம்சை அரசன் 2 படம், சில காரணங்களினால், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனையில் மனம் நொந்து போன ஷங்கருக்கு அடுத்து இன்னொரு புதிய பிரச்சனை கிளம்பியுள்ளது. அது என்னவென்றால், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு.
அரசியலுக்குள் நுழைந்துவிட்டதால் தன் சினிமா வாழ்க்கைக்கு குட்பை சொல்ல நினைத்த கமலும் ஒரு குட் சினிமாவை இறுதியாக கொடுத்துவிட்டு கிளம்பலாம் என நினைத்து இந்த ப்ராஜெக்டில் கையெழுத்திட்டார்.

கடந்த ஜனவரி மூன்றாவது வாரத்தில் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. ஆனால் சில நாட்கள் கூட அது தொடரவில்லை. காரணம் கமலுக்கான ‘இந்தியன் தாத்தா’ கெட்-அப் மேக்-அப்பில் ஷங்கருக்கு திருப்தியில்லை, அதனால் மேக் – அப் டீமை மாற்றுவதற்காக சின்ன பிரேக்! என்றார்கள்.

இப்படி இழுத்துக் கொண்டு போனதில் நாடாளுமன்ற தேர்தல் வைப்ரேஷன் துவங்கிட, கமல்ஹாசனும் தேர்தல் பணிகளில் மூழ்கிவிடார். குறைந்தது ஏப்ரல் 20-ம் தேதி வரையில் கமல் ‘இந்தியன் 2’ செட்டினுள் வர வாய்ப்பே இல்லை. ஏப்ரல் 18-ல் தேர்தல் முடிகிறது.

இந்நிலையில், இந்தியன் -2 படத்தின் வசனங்களில் சமகாலத்துக்கு ஏற்ப சில திருத்தங்களை செய்த ஷங்கர், அதை கமலிடம் காட்டி ஒப்புதல் பெற அழைப்பு விடுத்தாராம்.

அதற்கு ‘எலெக்ஷன் முடியுற வரைக்கும் கரெக்ஷனுக்கு வர வாய்ப்பே இல்லை.’ என்று கமலிடமிருந்து பதில் வந்துவிட்டதாம். இதனால் ஷங்கர் அதிருப்தியில் இருந்து வருகிறார் என்று நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது.