விஜயகாந்த் பாணியை கடைபிடிக்க தயாராகும் கமல்.., “கை” கொடுக்குமா இந்த ட்ரெண்டு

727

திரைத்துறையில் இருந்து அரசியல் களத்துக்கு பலர் வருகின்றனர். ஆனால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இவர்களை போல யாரும் தனக்கென அழியாத முத்திரையை அரசியலில் பதிக்கவில்லை.அதே நேரத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு தேமுதிக-வை தொடங்கிய விஜயகாந்த், அரசியல் களத்தில் வேகமாக தன்னுடைய அடையாளத்தை பதித்து வந்தார். கட்சியை தொடங்கிய அடுத்த ஆண்டே சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

அதில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட தேமுதிக-வினர் கணிசமான ஓட்டுகளை அள்ளினர். அதுமட்டுமின்றி, விருத்தாச்சலத்தில் போட்டியிட்ட விஜயகாந்த் மாபெரும் வெற்றியை தன்வசமாக்கியது மட்டுமின்றி அனைவரையும் வியப்படைய வைத்தார்.

இதனைத்தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தையும் தன்வசமாக்கினார்.

அடுத்து 2016 ஆண்டு தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. இதில் இருந்து மீள்வதற்கு இன்றுவரை கடுமையாக போராடி வருகின்றார். இதே பாணியை கமல் கடைப்பிடிக்கின்றார்.

அவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி ஒரு வருடம் நிறைவு பெருகின்றது. அதுமட்டுமின்றி, நடக்க இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்று போட்டி இடுகின்றார்.

அதற்கான பிரச்சாரங்களை தொடர்ந்து நடத்தி கொண்டு தான் இருக்கின்றார். அதனால், விஜயகாந்த் போல இவரும் அரசியல் வட்டாரத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்துவாரா? என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of