விஜய்சேதுபதி செய்த செயல்..! வெடித்த போராட்டம்..! கமல் சொன்ன அதிரடி கருத்து..!

459

தமிழ் திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் விஜய்சேதுபதி. இவர் ஒரு கேரக்டரில் நடிக்க சொன்னால், அந்த கேரக்டராகவே மாறிவிடுவார் என்றே சொல்லலாம்.

இவர் ஹீரோ இமேஜ், இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல், வில்லன், ஹீரோ என்ற எந்தவொரு நல்ல ரோலிலும் நடித்து அசத்துவார். சில சமயங்களில் விளம்பரப்படங்களிலும், இவர் நடித்து வருகிறார். அந்த வகையில் மண்டி என்ற செயலி விளம்பரத்தில் இவர் நடித்திருந்தார்.

இந்த விளம்பரத்தை பார்த்த சிறு, குறு வணிகர்கள் அதிர்ச்சியடைந்து, அவரது அலுவலத்தில் முற்றுகை போராட்டத்தை நடத்தினர். மேலும், சிறு மற்றும் குறு வனிகர்களை பாதிக்கும் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் கமல் ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரி நியமிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார். மேலும், உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்யவில்லை என்றும், ஆனால் தேர்தலுக்கு தயாராகி வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சிறு வணிகர்களை பாதிக்கும் விளம்பரத்தில் விஜய் சேதுபதி நடித்தது, விளம்பரத்தின் ஆழம் புரியாமல் நடந்த தவறு என்றும், விஜய் சேதுபதி தனது தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.