தமிழகத்திற்கு வெளிச்சம் கொடுக்க டார்ச்லைட்! கமல் ஹாசன் டுவீட்!

358

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் புதிய அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து வருகிறது.

அந்த வகையில் தனித்து போட்டியிடும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் சின்னம் கோரி விண்ணப்பித்திருந்தது. அதில் அக்கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில்

“மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்துக்கு நன்றி. மக்கள் நீதி மய்யத்திற்கு வழங்கப்பட்டுள்ள பேட்டரி டார்ச் சின்னம் மிகப் பொருத்தமானது. தமிழகத்தில் புதிய சகாப்தத்திற்கும் இந்திய அரசியலுக்கும் புதிய ஒளியை பாய்ச்சுவோம்”

என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of