கமல்ஹாசன் – சரத்குமார் சந்திப்பு!! உருவாகிறதா புதிய அணி?

237

சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று வெளியான நிலையில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்துள்ளார். இன்று காலை சென்னை ஆழ்வார் பேட்டையில் மநீம கட்சியின் தலைவரை சமக கட்சித் தலைவர் சரத்குமார் சந்தித்து கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். அவருடன் ஐ.ஜெ.கே கட்சி ஏற்கனவே கூட்டணி அமைத்துவிட்ட நிலையில் கமல்ஹாசனையும் கூட்டணியில் இணைக்க சரத்குமார் தீவிரம்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், நல்லவர்கள் எல்லாம் ஓரணியில் சேர வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி என்றும் அதிமுக கடைசி வரை கூட்டணி பற்றி பேச அழைக்காததால் தான் வெளியேறியதாகவும் தெரிவித்தார். மேலும் ஓட்டுக்கு பணம் வாங்கி வாக்களிக்க வேண்டாம் என்று காலில் விழுந்து மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என சமக கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார். கமல்ஹாசன் நல்ல முடிவை எடுப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement