சட்டமன்ற தேர்தல்.. கமல் ஹாசன் போட்டியிடும் தொகுதி இதுதான்..?

1065

தமிழக சட்டமன்ற தேர்தல், அடுத்த வருடம் நடைபெற இருப்பதால், அரசியல் கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம்..? எதுமாதிரியான பிரச்சார வியூகங்களை ஏற்கலாம்..? என்று பல்வேறு விதமான ஆலோசனையில் உள்ளனர்.

இதற்கிடையே, மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் ஹாசன், மாவட்ட நிர்வாகிகளுடன், திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் கமல் ஹாசன் எந்த தொகுதியில் போட்டியிட இருக்கிறார் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கமல் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட இருக்கிறாராம்.

மயிலாப்பூர் தொகுதி, அதிமுக-வின் கோட்டையாகும். அந்த தொகுதியில், பெரும்பாலும் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெறுகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில், பாஜகவினர் அந்த தொகுதியை பெறும் திட்டத்தில் உள்ளனராம்.

அப்படி, அந்த தொகுதி பாஜக வசம் சென்றால், குஷ்புவிற்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்றும், கமலும், குஷ்புவும் ஒரே தொகுதியில் போட்டியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், கடும் போட்டி இருக்கும் என்பது நிதர்சனம்..

Advertisement