திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கமல்ஹாசன் முடிவெடுக்க அதிகாரம் – செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு

431

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கமல்ஹாசன் முடிவெடுக்க அதிகாரம் வழங்கி அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகளின் அதிகார துஷ்பிரயோகங்களை எதிர்கொள்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்த இறுதி முடிவினை, கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எடுக்க அதிகாரம் வழங்க கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of