நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்திய கமல்ஹாசன்

771

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை அடையாறில் சிவாஜி மணிமண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு துணை முதல்வர் ஓபி பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல், சிவாஜி மணிமண்டபத்தில் தனது குடும்பத்தினருடன் நடிகர் பிரபு மரியாதை செலுத்தினார்.

பின்னர் நடிகர் திலகம் சிவாஜி சிலையை மீண்டும் மெரினாவில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனிடையே மக்கள் நீதி மய்யம் கட்சியின்
தலைவர் கமல்ஹாசன், சிவாஜி கணேசனின் இல்லத்திற்குச் சென்று அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Advertisement