சூர்யாவின் கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு!

309

புதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்துக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஏழை மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பல ஆண்டுகளாக உதவி செய்து வரும் சூர்யாவுக்கு கல்வி குறித்து பேசுவதற்கான உரிமை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் தனக்கும் உடன்பாடு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கருத்து சொன்னதற்காக நடிகர் சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப் போக்கிற்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of