கமல்ஹாசனை காண திரண்ட பொதுமக்கள் – போலீசார் லேசான தடியடி

445

திருப்பூரில் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் இருந்து தொழில்துறை வெளிமாநிலங்கள் நோக்கி செல்வதற்கு மத்திய, மாநில அரசுகளின் கவனக்குறைவே காரணம் என தெரிவித்தார்.

மேலும், இழப்பு ஏற்படும் முன் அதனை சரி செய்வதே சிறந்தது என்று கூறினார்.

இதனிடையே கமல்ஹாசன் திருப்பூர் சி.டி.சி கார்னர் பகுதியில் பேச இருந்த இடத்தில், ஏராளமானோர் திரண்டதால், கடும் நெருக்கடி ஏற்பட்டது.

இதையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லோசான தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பு நிலவியது.