பாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது | Kamal Hassan

533

இன்று மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், நடிப்புலகில் ரசிகர்களால் உலகநாயகன் என்று அன்புடன் அழைக்கப்பட்டும் கமல் ஹசான் நடிகர் பிரபு அவரின் இல்லத்திற்கு சென்று நடிகர் திலகம் சிவாஜியின் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது கமல் அவர்களின் மகள் ஸ்ருதிஹாசனும் உடன் இருந்தார்.

Kamal-Hassan

இது குறித்து கமல் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்…

“அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்து. வழக்கம் போல் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது. தம்பி பிரபு வாசித்து அளித்த பாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது. மனது புன்னகைத்தது”.

Momento

அந்த வாழ்த்துமடல் பின்வருமாறு..

அரிதாரம் முதல்தாரம் ஆன நடிப்பின் அவதாரம் திரு. சிவாஜி
அவர் வெள்ளித்திரை விஞ்ஞானி
அவரின் தலைமகன் நீ கலைஞானி !
நடிகர் திலக நாயகனே பாராட்டிய
உலகநாயகனே !
நீ நடிப்பை ஆண்டு, ஆனது அறுபது ஆண்டு !
நீ ஊரை ஆண்டு ! உலகை ஆண்டு
வாழ்ந்திடுக நூறாண்டு !

– அன்னை இல்லம்

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of