பெருந்தொற்றிடமே கெத்து காட்டிய கமல் பட நடிகர்..!

1420

கமலின் பம்மல் கே சம்பந்தம் படத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் மலையாள நடிகர் உன்னி கிருஷ்ணன். சந்திரமுகி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு, 98 வயதாகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், தீவிர சிகிச்சை பெற்று வந்தார். தற்போது இவரது உடல் பூரண குணமடைந்து விட்டதாக இவரது மகன் பவதாசன் தெரிவித்துள்ளார்.

98 வயதிலும் கொரோனாவை வென்று, பூரண உடல் நலத்தோடு வீடு திரும்பியுள்ள இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement