விவசாயக் கடனை தள்ளுபடி செய்து முதல் கையெழுத்திட்டார் ம.பி முதல்வர் கமல்நாத்

504

மத்திய பிரதேச மாநில முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், தேர்தல் வாக்குறுதி அளித்தபடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்யும் கோப்பில் முதல் கையெழுத்திட்டார்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுவந்த பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.

ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

அந்தக் கட்சிக்கு பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அங்கு முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் முதல்வராக இன்று பதவி ஏற்றுக் கொண்டார். துணை முதல்வராக சச்சின் பைலட் பதவியேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூப் அப்துல்லா, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து மத்தியப்பிரதேச முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆனந்தி பென் படேல் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த விழாவில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான், விழா மேடையில் கமல்நாத் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியாவின் கைகளை உயர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பொறுப்பை ஏற்றுக்கொண்ட கமல்நாத், தேர்தல் வாக்குறுதி அளித்தபடி விவசாய கடன் தள்ளுபடி செய்யும் கோப்பில் முதல் கையெழுத்திட்டார்.

மத்தியப்பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களைக் கைப்பற்றி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of