எம்.ஜி.ஆரை காக்க வைத்த கமல்! அதுவும் இவ்வளவு நாட்களா..? அவரே சொல்கிறார்!

896

கடந்த வாரம் பிக்-பாஸ் சீசன் 3 ஆரவாரமாக தொடங்கப்பட்டது. இதில் 16 போட்டியாளர்கள் தற்போது வரை கலந்து கொண்டுள்ளனர். வார இறுதியில் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமலஹாசன் போட்டியாளர்களிடம் பேசுவார்.

அதன்படி நேற்றைய நிகழ்ச்சியின்போது, எம்ஜிஆரின் நாளை நமதே படத்தில் நடிக்க தவறியது பற்றி பேசினார். அவர் பேசியது பின்வருமாறு:-

“எம்.ஜி.ஆர். உடன் நாளை நமதே படத்தில் நடிக்க வேண்டியது. அந்தப் படத்துக்கு சேது மாதவன் இயக்குநர். என்னுடைய கால்ஷீட்டுக்காக எம்.ஜி.ஆர். ஒரு மாதம் காத்திருந்தார்.

ஆனால் அப்படத்தில் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதுவும் எம்.ஜி.ஆருக்கு தம்பியாக நடிக்க கூடிய பாத்திரம். யோசித்துப் பாருங்கள், அப்போது அந்தப் படத்தில் நாளை நமதே என அவருடன் டான்ஸ் ஆடி, பாட்டுக்கு வாய் அசைத்திருந்தால் இப்போதுள்ள சூழ்நிலைக்கு பிரயோஜனமாக இருந்திருக்கும்.

நாளை நமதே என்ற வாசகத்தைதான் இப்போது பயன்படுத்தி வருகிறேன். அப்போது நடித்திருந்தால் இப்போது நான் செல்லும் இடங்களில் எல்லாம் அந்தப் பாடலையும் முடிந்தால் படத்தையும் போட்டுக் காட்டிருப்பேன். இப்போது யோசித்துப் பார்த்தால் எவ்வளவு பெரிய இழப்பு என தோன்றுகிறது”

என்றார் அவர்.

அதேபோல கடுமையான தருணங்களில் உங்களுக்கு தோள் கொடுத்தவர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்,

“விஸ்வரூபம் படப் பிரச்னையின்போது தமிழக மக்கள் எனக்கு தோளோடு தோள் கொடுத்ததை மறக்கவே முடியாது. இதற்கு நான் என்ன செய்யப்போகிறேன் என நினைத்துதான் இப்போது நான் இருக்கும் நிலை.

என் எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காகத்தான் என சொல்வது வெறும் திரைப்பட வசனமல்ல. அப்போது என் மீது மக்கள் கொடுத்த அன்புக்கு எப்போதும் என்னால் வட்டி மட்டுமே செலுத்தி முடியும். அவர்களின் அன்பு என்ற கடனை அடைக்கவே முடியாது”

என்றார் கமல்ஹாசன்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of