நோஸ்கட் செய்த கமல்..! முகமே மாறிப்போன லாஸ்..!

821

பிக்-பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய கொஞ்ச நாட்களிலேயே, லாஸ்லியாவிற்கு ஆர்மியை அவரது ரசிகர்கள் தொடங்கினார்கள். அதற்கு முக்கிய காரணம், அவர் மிகவும் கியுட்டாக இருக்கிறார், அவர் செய்யும் சிறு சிறு செயல்கள் தான் என்று ரசிகர்கள் கூறி வந்தனர்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல லாஸ்லியாவின் மீது இருந்த மரியாதை அவரின் செயல்களால் குறைந்தது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான புரேமோ வீடியோ வெளியாகியுள்ளது.

அதில், நான் நிறைய விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன், அது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஒரு விஷயத்தை பொதுவாக சொன்னால் நான் ஏற்றுக் கொள்வேன் என்று லாஸ்லியா கூற கமல், பொதுவாகத் தான் சொன்னேன், நான் பெயர் எதுவுமே சொல்லவில்லையே என்று சொல்கிறார்.

இதையடுத்து பார்வையாளர்கள் அனைவரும் கைதட்டுகின்றனர். பின்னர், பிக் பாஸ் என்பது போட்டிதளம் இதை ஒரு சுற்றுலாத்தலமாக மாத்திக்காதீங்க நீங்க என்று கமல் லாஸ்லியாவிடம் தெரிவிக்கிறார்.

எப்போதும் நம்மிடம் நார்மலாக பேசும் கமல், தற்போது இவ்வாறு பேசுகிறாரே என்று லாசின் முகம் மாறுகிறது. ஆரம்பத்தில் லாஸ்லியாவிற்கு இருந்த மரியாதைகள் நாளுக்கு நாள், குறைந்துக்கொண்டே போகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of