MGR இடத்தை நிரப்ப அரசியலுக்கு வந்தேன்! கமல் பேச்சு!

742

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் கூறுகையில்:-

எம்ஜிஆர் ஆரம்பித்து வளர்த்த கட்சியை சேர்ந்தவர்கள் அவரது புகைப்படத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து ஸ்டாம்ப் சைசுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.

எம்ஜிஆரை மறந்த அவர்களுக்கு பாடம் புகட்டவே நான் அரசியலுக்கு வந்தேன் எம்ஜிஆருடன் இருந்தவர்கள், அவருக்கு நெருக்கமானவர்கள் கட்சியை விட்டு ஒதுக்கப்பட்டார்கள்.

அதெயெல்லாம் பார்த்து மனம் கொதித்து கொண்டிருந்த அவரது ரசிகர்களில் நானும் ஒருவன். ஒரு கட்சி ஆரம்பித்தால் அதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகும் என்று சொன்னார்கள்.

ஆனால் நான் ஒரு வருடத்தில் செய்து காட்டுகிறேன் என்று கூறினேன். எம்ஜிஆர், என்.டி.ஆர், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இதை ஏற்கனவே செய்து காட்டியுள்ளனர்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of