குற்றவாளிகள் கோட்டையில் உள்ளனர்! கண்ணகி நகரில் தேடாதிங்க! கமல் பேச்சு!

413

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தென் சென்னை வேட்பாளர் ரங்கராஜனை ஆதரித்து, கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், தற்போது திருடி கொண்டிருக்கும் பணத்தை நிறுத்தினாலே 2 தமிழகத்தை உருவாக்கலாம் என்றார்.

குற்றவாளிகள் அனைவரும் கோட்டையில் இருப்பதால், கண்ணகி நகரில் தேடினால் எப்படி கிடைப்பார்கள் என்று கேள்வி எழுப்பினார். தாங்கள் வெற்றி பெற்றால் மற்ற கட்சிகளை போல் செய்வோம் என ஏமாற்றமால், நிச்சயம் செய்வோம் என தெரிவித்தார்.

மேலும், முதன்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் பெற்றோர் சொல்வதை கேட்காமல், எது நல்ல கட்சி என்பதை அறிந்து வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.