CAA குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கு கமல் ஆதரவு

458

டெல்லி நடைபெற்று வரும் கலவரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், இரும்பு கரம் கொண்டு போராட்டத்தை தடுத்திருக்க வேண்டும் என்றும், வன்முறையை ஒடுக்காவிட்டால் ராஜினாமா செய்யுங்கள் என்றும் காட்டமாக தெரிவித்திருந்தார்.

மேலும், மத்திய அரசு சி.ஏ.ஏ-வை திரும்ப பெறும் என்று தனக்கு தோன்றவி;ல்லை என்றும், எவ்வளவு போராட்டம் நடத்தினாலும் சி.ஏ.ஏ-ஐ வாபஸ் பெற மாட்டார்கள் என நினைக்கிறேன் என்றும் ரஜினி தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினியின் இந்த கருத்து குறித்து நடிகர் கமல் ஹாசன், டுவிட்டரில் டுவீட் போட்டுள்ளார். அதில், “சபாஷ் நண்பர்.. ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை. வருக, வாழ்த்துக்கள்” என்று கமல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of