சென்னை நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டாலினை கலாய்த்த கமல்

995

நான் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி சட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ளமாட்டேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்
சென்னை ஆர்.ஏ.புரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் பேசினார்.

அதில் என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம், யார் வேண்டுமானாலும் படிக்கலாம். நான் தாமதமாக அரசியலுக்கு வந்தமைக்காக மன்னிப்பு கோருகிறேன்

அரசியலுக்கு வருவதற்கு வழி என்று எதுவுமில்லை; யாரும் அரசியலை நீக்கிவிட்டு வாழ முடியாது .

முதலமைச்சர் என்பவர் உங்கள் நாட்டை வழிநடத்தும் ஒரு அலுவலர் மட்டுமே நான் தமிழன்டா என்று சொல்பவர்கள் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள்? என கேள்வி எழுப்பிய கமல்,

யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள்; ஆனால் நிச்சயம் வாக்களியுங்கள் என தெரிவித்தார். மேலும் பேசிய அவர் நான் சட்டமன்றத்தில் கூட சட்டையை கிழித்துக் கொள்ள மாட்டேன். சட்டையை கிழித்துக் கொண்டாலும் வேறு சட்டையை மாற்றிக்கொண்டு தான் வருவேன் என கூறினார்.

இந்த சொல்லாடல் சட்டமன்றத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வந்ததை விமர்சித்து பேசியதாக தெரிகிறது.