ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் – கமல்

233

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் இன்று விருப்ப ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ்பாபு இணைந்தார்.

அவருக்கு மக்கள் நீதிமய்யத்தின் உறுப்பினர் அடையாள அட்டையை கமல்ஹாசன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், பலமாதங்கள் ஆலோசனை நடத்தியபிறகு ஊழலை ஒழிக்கும் உன்னத லட்சியத்தோடு மக்கள் நீதிமய்யத்தில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சந்தோஷ்பாபு இணைந்திருப்பதாக கூறினார்.

தமிழக அரசின் செயல்பாட்டில் திருப்தி இல்லை என்றும் கூறினார். மேலும் கூட்டணி வைத்தாலும் கொத்தடிமைகளாக இருக்க மாட்டோம் என்றும் முக்கிய முடிவுகள் எடுக்கும் இடத்திலேயே இருப்போம் எனவும் தெரிவித்தார்.

அனைவரிடமும் ஆதரவு கேட்கும்போது நண்பர் ரஜினியிடம் மட்டும் ஆதரவு கேட்காமல் இருப்பேனா? எனவும் கமல்ஹாசன் கூறினார்.

Advertisement