ஏழைக்கு உதவுபவன் கையைத்தட்டிவிடும் அரசு – கமல் கண்டனம்

1156

என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத்தட்டிவிடுகிறது என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

வறுமையில் வாடும் ஏழைமக்களுக்கு தனியார் அமைப்புகள் நேரடியாக உதவி செய்வதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உதவி செய்ய நினைப்பவர்கள், முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பும்படியும், உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில், அண்டை மாநிலங்கள் சில COVID19 உடன் போராட, தனியார், இளைஞர், ஓய்வு பெற்ற மருத்துவர் என பலரின் உதவியை நாடிப் பெறுகின்றனர். என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத்தட்டிவிடுகிறது என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement