பழ.கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்!

367

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தலுக்கு இன்னும் 36 நாட்களே இருக்கிறது. நாங்கள் அடுத்த கட்ட வேளையில் இறங்கியிருக்கிறோம். மூத்த அரசியலாளர் முன்னாள் எம்.எல்.ஏ பழ கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைகிறார். மநீம சார்பாக தேர்தலில் போட்டியிடுகிறார்” என்று தெரிவித்தார்.

’நேர்மையாளர்களின் கூடாரத்துக்கு அவரை மனதார வரவேற்கிறேன். மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் மக்கள் நீதி மய்யத்தோடு கைகோர்த்துள்ளது. மார்ச் 1ஆம் தேதி முதல் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தேர்வு இருக்கும்” எனத் தெரிவித்தார்.

Advertisement