49 பேர் மீது தேசதுரோக வழக்கு : அதிரடி டுவீட் போட்ட கமல்ஹாசன்..!

369

இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசவிரோத வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்யவேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினர், தலித்கள் தாக்கப்படுவதை தடுக்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பேர் மீது பீகாரில் தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை பல்வேறு அரசியல் கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் இந்த நடவடிக்கைக்கு மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 49 பேர் மீதான வழக்குகளை ரத்து செய்யவேண்டும் எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of