ஆந்திராவில் சூட்டுக் கொல்லப்பட்ட காமராஜின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய கோரிக்கை

204

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அடுத்த கானமலை பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவர் கடந்த 31ம் தேதி ஆந்திராவில் செம்மரம் கடத்தவந்ததாக கூறி ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரது உறவினருக்கு நேற்று முன்தினம் மாலை தெரிவிக்கப்பட்ட நிலையில், காமராஜின் உடல் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இது குறித்து காமராஜின் மருமகன் ஐயப்பன் நேற்று தனது உறவினர்களுடன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜயப்பன் தனது மாமனார் இறப்பில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாக தெரிவித்தர்.

தங்களின் உரிய அனுமதியின்றி பிரேத பரிசோதனை செய்து விட்டதுடன், உடலை பெற்றுக் கொள்ளுமாறு ஆந்திர அரசு தங்களை மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டினார். எனவே இறப்பில் சந்தேகம் உள்ளதால் மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here