மாணவிக்கு பாலியல் தொல்லை..! – காமராஜர் பல்கலை. எடுத்த அதிரடி நடவடிக்கை..!

389

மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசியருக்கு கட்டாய பணி ஓய்வு வழங்க ஆட்சி மன்றக் குழு முடிவு செய்துள்ளது.

கேரள கல்லூரியில் பணியாற்றும் பெண் பேராசிரியர் ஒருவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் பிஹெச்டி படிப்பில் சேர்ந்தார். இந்நிலையில் அந்த மாணவி, இதழியல் துறை தலைவரான பேராசிரியர் கர்ண மகாராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த டிசம்பர் மாதம் குற்றம்சாட்டினார்.

ஏற்கனவே பேராசிரியர் நிர்மலாதேவி தொடர்பான சர்ச்சை ஏற்பட்ட நிலையில் அதில் அடிபட்ட பேராசிரியர் கர்ண மகாராஜனின் மீது மாணவி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் மாணவியின் இந்த பாலியல் குற்றச்சாட்டை பேராசிரியர் கர்ண மகாராஜன மறுத்து வந்தார்.

ஆனால் மாணவியின் புகார் குறித்து பல்கலைக் கழக நிர்வாகம் விசாரணை நடத்தி வந்தது. இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பேராசிரியர் கர்ண மகாராஜனுக்கு கட்டாய பணி ஓய்வு வழங்க முடிவு தீர்மானம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து பேராசிரியர் கர்ண மகாராஜனுக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. மாணவி ஒருவரின் புகாரின் பேரில் பேராசிரியர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின வரலாற்றில் முதல் முறை என கூறப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of