காமராஜ் உறவினரின் அலுவலகத்தில் விடிய விடிய சோதனை முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்

460

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த சேரன்குளத்தை சேர்ந்தவர் மனோகரன்.

தழிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜின் உறவினரான இவர், தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குனராக உள்ளார். இந்நிலையில் மனோகரனின் பெட்ரேல் பங்க், அலுவலங்கள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். மற்ற இடங்களில் நள்ளிரவுடன் சோதனை நிறைவு பெற்ற நிலையில், மன்னார்குடியில் உள்ள அவரது அலுவலகத்தில் மட்டும் விடிய விடிய சோதனை நடைபெற்று வருகிறது.

சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மனோகரன் மீது திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்பனை செய்தாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் பழனிசாமி மீது டெண்டர் ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு உள்ள நிலையில், அமைச்சரின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of