காஞ்சிபுரம் அருகே பிரசவத்தின்போது தலை துண்டான குழந்தை – செவிலியரின் அலட்சியத்தால் நிகழ்ந்த சோகம்

1243

காஞ்சிபுரத்தில் ஒரு பெண்ணுக்கு பிரசவத்தின்பொழுது குழந்தையின் தலை துண்டான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

30 கிராம மக்கள் வந்து செல்லும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் மருத்துவர் இல்லாததால் சிகிச்சைக்கு வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதாகவும் , உயிரை பணயம் வைத்து செவிலியர்களிடம் சிகிச்சை பெறும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

இரவு நேரத்தில் மருத்துவர் இல்லாத நிலையில் செவிலியர் பிரசவம் பார்த்தால் தான் தங்களது குழந்தையை பறிகொடுத்துள்ளோம் என பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் பிரசவத்தின்போது மருத்துவர் இல்லாத நிலையில் செவிலியர் பிரசவம் பார்த்தபொழுது குழந்தையின் தலையை பிடித்து இழுத்ததாக தெரிகிறது. இதில் அந்த குழந்தையின் தலை துண்டாகி கையோடு வந்துள்ளது.

இதனையடுத்து செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பொம்மியின் வயிற்றில் இருந்த குழந்தையின் உடல்பகுதியை மீட்டனர்.

இதே போன்று ராஜஸ்தானில் கடந்த ஜனவரி மாதம் மருத்துவரின்றி செவிலியர் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்தபொழுது குழந்தையின் காலைப்பிடித்து இழுத்ததால் தலை துண்டாகியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்பொழுது தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதேபோன்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of