கந்து வட்டி கொடுமை – இளம்தம்பதி கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்ச்சி

364

திருவண்ணாமலையில் கந்து வட்டி கொடுமையால் இளம்தம்பதி கைக்குழந்தையுடன் காவல்நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் சம்மந்தனூரைச் சேர்ந்த ராஜிவ்காந்தி என்பவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் திருஞானமூர்த்தியிடம் கந்துவட்டிக்கு கடன் வாங்கியுள்ளார்.

ராஜிவ்காந்தி பணத்தை திருப்பி கொடுத்த பிறகும், திருஞானமூர்த்தி மேலும் 30ஆயிரம் கேட்டு மிரட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த ராஜிவ்காந்தி தனது மனைவி மற்றும் கைக் குழந்தையுடன் நகர காவல்நிலையம் முன் தீக்குளிக்க முயன்றார்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய போதிலும், தலைமைக் காவலர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குவதாக கூறப்படுகிறது.