‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் ? | Kangana Ranaut

705

ரத்னகுமார், ‘மேயாத மான்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு அமைந்த அடுத்த திரைப்படம் தான் ‘ஆடை’. ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தில், முதன்மைக் கதாபாத்திரத்தில் அமலா பால் நடித்தார்.

பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் ரத்னகுமார். அமலா பால் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் கங்கனா ரணாவத், இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

Advertisement