மகாராஷ்டிரா அரசை மீண்டும் விமர்சித்த நடிகை கங்கனா ரணாவத்

192

வாரிசு அரசியலின் மோசமான தயாரிப்பு உத்தவ் தாக்கரே என நடிகை கங்கனா ரணாவத் விமர்சித்து உள்ளார்.

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு விசாரணை தொடர்பாக மும்பை போலீசாரையும், மகாராஷ்டிரா அரசையும் பிரபல நடிகை கங்கனா ரணாவத் கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறியதை அடுத்து மாநில அரசுக்கும், அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உத்தவ் தாக்கரே, தங்களது வீட்டில் வாழ்வாதாரம் இல்லாமல் மும்பை வந்தவர்கள் துரோகம் செய்கின்றனர் என கூறினார். இதற்கு பதில் அளித்து உள்ள நடிகை கங்கனா ரணாவத் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை வாரிசு அரசியலின் மோசமான தயாரிப்பு என கூறியுள்ளார்.

Advertisement