தூத்துக்குடியில் களமிறங்கும் கனிமொழி.., நாளை விருப்ப மனு தாக்கல்

714

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., பா.ம.க., புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி ஏற்பட்டு உள்ளது. தே.மு.தி.க. வையும், த.மா.கா.வையும் கூட்டணியில் சேர்க்க அ.தி.மு.க. முயற்சி எடுத்து வருகிறது.

அதேசமயம் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை அங்கம் வகிக்கின்றன. இதில் புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு உள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி நாளை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை தேர்தலை சந்திக்காமல், மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த கனிமொழி, இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால், மத்திய மந்திரி பதவியை கனிமொழிக்கு கேட்டு பெறவும் தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of