அங்கு கோடி கோடியாக பணம் இருக்கும்.., அங்கு சோதனை செய்ய தயாரா? கனிமொழி காட்டம்

671

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகளின் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இந்நிலையில், தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனைக்குப் பிறகு கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அவர் பேசும்போது, ‘சுமார் 8.30 மணியளவில் சோதனை செய்ய அனுமதி கேட்டார்கள். உரிய ஆவணம் இருக்கிறதா என்று கேட்டேன். நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தோம். என் வீட்டில் சோதனை செய்யப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது.

சோதனைக்குப் பின் ஒன்றும் இல்லை என்று அவர்களே ஒப்புக் கொண்டார்கள். தமிழிசை வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கிறது. அங்கு சோதனை செய்ய தயாரா?. தூத்துக்குடியில் எங்களை அச்சுறுத்துவதற்காக சோதனை நடைபெற்றிருக்கிறது. தோல்வி பயத்தால் சோதனை செய்யப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன். எதுவாக இருந்தாலும் நாங்கள் சந்திப்போம்’ என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of