இந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது அவமானகரமானது – கனிமொழி

188

இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, பள்ளிக்கூடத்தில் தமிழும் ஆங்கிலமும்தான் படித்தேன், ஹிந்திமொழியை படிக்கவில்லை என்று கூறினார்.

இதனால், முன்னாள் பிரதமர் தேவகவுடா ஹிந்தி மொழியில் பேசியதை, தமிழில் மொழிபெயர்த்தேன் என்று கூறுவது தவறான செய்தி என்று மறுப்பு தெரிவித்தார்.

ஹிந்திமொழி தெரி்ந்தால்தான் இந்தியர் என்பது அவமானகரமானது என்றும் மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார்.

Advertisement