”பட்டேல்” சிலைக்கு 3000 கோடி… புயல் பாதிப்புக்கு 350 கோடியா?” – கனிமொழி குற்றச்சாட்டு

275

கஜா புயலின் தாக்குதலில் காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட12 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அரசாங்கத்தின் சார்பிலும், பல்வேறு நிறுவனங்கள் சார்பிலும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக இடைக்கால நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.353 கோடியே 70 லட்சம் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி.கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில், “உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட தமிழர்களுக்கு 350 கோடியாம் என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of