“கையை பிடித்து.. இழுத்து.. கண்ணத்தில் முத்தம்..” பரபரப்பான பிரபல நடிகை..! அத்துமீறிய ரசிகர்..!

384

பெண்கள் மீதான பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக்குறியாகும் நிலையில், நடிகைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வந்தது.

அதில், சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஒரே கூட்டமாக இருக்கிறது. ஹீரோ மற்றும் ஹீரோயின் இருக்கும் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

அப்போது, அங்கிருந்த ரசிகர் ஒருவர் ஹீரோயின் கையை பிடித்து, கண்ணத்தில் முத்தம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடுகிறார். பின்னர், அந்த ரசிகரை பிடிக்க மற்றவர்கள் முயற்சி செய்கின்றனர். அதோடு அந்த வீடியோ முடிவடைகிறது.

அந்த வீடியோவில் இருந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா என்று கூறி வந்த நிலையில், அது கன்னட நடிகை ஆஷிகா என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததையே இந்த சம்பவம் காட்டுகிறது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of