வெளியானது ‘கண்ணே கலைமானே’ திரைப்படத்தின் ட்ரைலர்

492

உதயநிதி ஸ்டாலின் ன் மாறுபட்ட கதாபாத்திரத்தில் தாயாரிக்கப்பட்டு வரும் படம் ‘கண்ணே கலைமானே’ திரைப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியானது. டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி பகிர்ந்து வெளியிட்டார்.

சீனுராமசாமியின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கிராமத்து விவசாயியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் தமன்னா வங்கியில் பணி செய்யும் அலுவலராக வருகிறார். முன்னதாக தமன்னா தர்ம துரை படத்தில் சீனு ராம சாமியுடன் பணியாற்றியுள்ளனர்.

சீனு ராமசாமியின் பாணியில் இந்த படமும் அம்மா பாசம், கொஞ்சம் சண்டை, காதல், அழுகை, கிராமம், லாங் ஷாட் பார்வை என தயாராகி உள்ளது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடலாசிரியாராக வைரமுத்து உள்ளார். ஏற்கனவே படத்தின் ஒரு பாடல் இணையத்தில் வெளியாகி பல இடங்களில் ஒலித்து கொண்டிருக்கிறது. பெரிய நட்சத்திரங்களின் மாறுபட்ட கதையேற்பினால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.