
நடிகர் துல்கர் சல்மான், ரீது வர்மா, ரக்ஷன், நிரஞ்சனி, இயக்குநர் கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.
துல்கரின் 25-வது படமாக வெளியான இந்த திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்றை பெற்றது. திரைப்பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டியிருந்தனர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அப்படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியை செல்போனில் அழைத்து பாராட்டியிருந்தார்.
இந்நிலையில், தேசிங்கு பெரியசாமிக்கும், அப்படத்தின் இரண்டாவது கதாநாயகியாக நடித்த நிரஞ்சனிக்கும் இடையே திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது காதல் திருமணம் அல்ல என்றும், பெற்றோர்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும் கூறப்படுகிறது. வரும் பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி அன்று, இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.