குடோனுக்கு தனியாக வந்த வியாபாரி..! கதறவிட்ட பெண்..! எல்லாம் அதுக்காக தான்..,

985

பெண்கள் மீது நடத்தப்படும் அத்து மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இந்த அத்து மீறல்களை தடுக்க கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துகளை முன் வைத்துள்ளனர்.

ஒரு சிலர் திருடனாய் பார்த்து திருடா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதை போல அத்து மீறல்களை நடத்துபவர்கள் அவர்களாகவே நிறுத்தினால் தான் ஒழிக்க முடியும் என்றும் சிலர் கூறுகின்றனர்.

இந்நிலையில் பாலியல் தொல்லை கொடுத்த பழ வியாபாரிக்கு, பெண் கொடுத்த நூதன தண்டனை இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. குமரி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு, அவர் வீட்டின் அருகில் உள்ள பழ வியாபாரி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் கடும் கோபமடைந்த அந்த பெண், நேரம் பார்த்து இவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று காத்திருந்திருக்கிறார். அந்த பழ வியாபாரி தனது குடோனிற்கு தனியாக வந்துள்ளார். அப்போது அங்கு செல்போனுடன் வந்த அந்த பெண், பழ வியாபாரியை மோசமான வார்த்தைகளில் திட்டிக்கொண்டே அடித்து உதைக்கிறார்.

கடைசியில் வியாபாரி அடி வாங்கிய வீடியோவை அந்த பெண் இணையத்திலும் பரப்பியுள்ளார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து காவல்துறையினர் இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர்.

பாலியல் அத்துமீறல்கள் நடக்கும் போது, பெண்கள் இதுபோன்ற தைரியமான செயல்களில் ஈடுபட்டாலே, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of