“வேலை கிடைச்சுடுச்சு..” நேர்த்திக்கடனை நிறைவேற்ற ரயில் முன் பாய்ந்த இளைஞர்..!

6350

கன்னியாகுமரி மாவட்டம் எள்ளுவிளை பகுதியை சேர்ந்த நவீன் எனபவர், பொறியியல் படித்து முடித்த பின்னர், வேலைக்காக முயற்சித்து வந்துள்ளார். வங்கி தேர்வுகள் எழுதிய நிலையில், எந்த வேலையும் கிடைக்கவில்லை.

இதனால் தனக்கு வேலை கிடைத்தால், தன் உயிரை காணிக்கையாக தந்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டியுள்ளார். இந்த நிலையில் பல ஆண்டுகளாக கிடைக்காத வேலை, தற்போது கிடைத்தது.

மும்பையில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பணியில் அமர்ந்த நவீன், 15 நாட்களுக்கு பின்னர் நேற்று மும்பையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்துள்ளார். அங்கிருந்து நாகர்கோவில் வந்த அவர், புத்தேரி பகுதியில் உள்ள தண்டவளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது நவீனிடம் இருந்து கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் தற்கொலைக்கான காரணத்தை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

வேலை கிடைக்காத விரக்தியில் முட்டாள் தனமாக தற்கொலை செய்யும் நபர்கள் மத்தியில், வேலை கிடைத்தும், நேர்த்திக்கடனுக்காக உயிரை பறிக்கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement