விளையாடுவது எளிது…, நடிப்பது தான் கடினம்…, கபில்தேவ் அதிரடி வீடியோ!

534

கே.ஆர். பிரபு இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே பாலாஜி புதியாதாக நடித்து வெளிவர இருக்கும் படம் எல்.கே.ஜி(LKG). இப்படம் முழுக்க முழுக்க தமிழக அரசியலை கலாய்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. என சில நாட்களுக்கு முன்பு வெளியான டிரெய்லரின் மூலம் நாம் அனைவருக்கும் அறிந்திருப்போம்.

பலர் இப்படத்தை வரவேற்று வருகின்ற ஆனால், அதே நேரம் பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரரான கபில்தேவ் இப்படம் குறித்து நகைச்சுவையாக தன்னுடைய கருத்தை இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ மூலம் வெளியுட்டுள்ளார்.

இந்த வீடியோவில்,

ஒரு கிரிக்கெட் வீரராக இருப்பது எளிதான ஒன்று. ஆனால், சினிமாவில் நடிப்பது சற்று கடினமானது அதனால், பாலாஜி-யின் எல்.கே.ஜி படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன்.

அதுமட்டுமின்றி, இந்த வீடியோவில் தமிழில் பேசி ரசிகர்களை வியப்படைய வைத்திருப்பார்.