“சூப்பர் ஸ்டார் இயக்குனர் அட்லீ”.. “விசில் அடிக்கத் தூண்டும் விஜய்..!” – புகழ்ந்து தள்ளிய பாலிவுட் இயக்குனர்..!

788

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடித்துள்ள பிகில் படத்தை இயக்கியுள்ளார்.

மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் – அட்லி – ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகியுள்ள படம் இது. தயாரிப்பு – ஏஜிஎஸ் நிறுவனம். நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

ஒளிப்பதிவு – ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் – விவேக், படத்தொகுப்பு – ரூபன் எல். ஆண்டனி, கலை – முத்துராஜ், சண்டைப் பயிற்சி – அனல் அரசு.

இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர், பிகில் படத்தைப் பாராட்டி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

என்ன ஒரு கொண்டாட்டமான திருவிழா பிகில் படம்! பரபரப்பும் உணர்வுபூர்வமான காட்சிகளும் கொண்ட படம். தளபதி விஜய் நல்ல ஃபார்மில் உள்ளார். அவருடன் இணைந்து விசில் அடிக்கத் தூண்டுகிறார்.

அவர் நடிப்பு அற்புதம். தான் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை நிரூபித்துள்ளார் அட்லி. சூப்பர் ஸ்டார் இயக்குநர் என்று பாராட்டியுள்ளார்.

Advertisement