சர்வதேச அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

449

கோவையில் தனியார் கல்லூரியில் சர்வதேச அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 3 ஆவது சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், இலங்கை, பங்களாதேசம் உள்ளிட்ட பத்து நாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்குபெற்றனர்.

போட்டியில் வீரர்கள் பல்வேறு விதங்களில் சாகசங்களை செய்து காடி அசத்தினர். சர்வதேச அளவில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் சர்வதேச அளவிலான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. மேலும் வருகிற டிசம்பர் மாதம் இந்தோனேசியாவில் நடைபெற உள்ள கராத்தே போட்டியில் பங்குபெறும் வாய்ப்பையும் பெற உள்ளனர்.

அடுத்த ஆண்டு 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வீரர் வீராங்கனைகள் பங்குபெற உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.