வரலாற்று நினைவுச் சின்னமான காரல்மார்க்ஸ் கல்லறை இடித்து சேதம் – மர்மகும்பல் அட்டூழியம்

309

லண்டனில் நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வந்த தத்துவமேதை காரல்மார்க்ஸ் கல்லறையை மர்மகும்பல் சேதப்படுத்தியுள்ளனர். ஜெர்மனியை சேர்ந்த புரட்சிகர தத்துவமேதை காரல் மார்க்ஸின் கல்லறை வடக்கு லண்டனில் உள்ளது.அங்கு அது நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு, பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த கல்லறையை யாரோ மர்ம கும்பல் இடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

கல்லறையில் வைக்கப்பட்டுள்ள நினைவு கல்வெட்டும் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1880-ம் ஆண்டுகளில் இக்கல்லறை சேதப்படுத்தப்பட்டு பின்னர் சீரமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of