எடியூரப்பா ஆட்சிக்கு வந்த புதிய சோதனை.. இத செஞ்சா தான் தலைவலி குறையும்… – பலப்பரீட்சையில் பாஜக..

386

கர்நாடக மாநிலத்தில் 15 – சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் மாதம் 21- ஆம்தேதி நடைபெறுகிறது.

இடைத்தேர்தல் நடைபெறும், 15 தொகுதிகளில் 8 தொகுதிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே ஆட்சியைத்தொடரமுடியும் என்ற நெருக்கடி முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் நடைபெற்றதைப்போல கர்நாடகத்தில் மினி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பாவின் ஆட்சி தொடர 8 எம்.எல்.ஏக்கள் தேவைப்படுகிறது.

மொத்தமுள்ள 225 சட்டமன்ற உறுப்பினர்களில், 12 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால், 213 எம்.எல்.ஏக்களாக குறைக்கப்பட்ட, மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் பாரதிய ஜனதாக்கட்சி 107 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

தற்போது, காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், அறுதிப்பெரும்பான்மையைப்பெற 113 எம்.எல்.ஏக்கள் தேவைப்படுகிறது. இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 12 எம்.எல்.ஏக்களின் தொகுதிகள் உள்ளிட்ட 15 – சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதனால், முதலமைச்சராக எடியூரப்பா தொடருவதற்கு குறைந்தபட்சம் 8 தொகுதிகளில் வெற்றிபெறவேண்டிய நெருக்கடி பா.ஜ.க அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of