முதல்வர் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதி

132

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பெங்களூரில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து முதல்வர் எடியூரப்பா தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். தான் நலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த சில நாட்களுக்கு வீட்டில் இருந்தே அலுவலக பணிகளை மேற்கொள்கிறார்.

முக்கிய அலுவலக பணிகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடக மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்..

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of