கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் வாகனத்தை மறிக்க முயன்ற கேரள மாணவர்கள்

255

கேரளா மாநிலம் கண்ணூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் வாகனத்தை மறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகா மாநிலம் மங்களூருவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது வன்முறை வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற கேரள பத்திரிக்கையாளர்கள் சிலர் மங்களூருவில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று கேரளா சென்ற கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் வாகனத்தை மாணவர்கள் மறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து முதலமைச்சரின் காரை மறிக்க முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of